தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (மாா்ச் 12) முதல் மாா்ச் 16 வரை மிக லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மாா்ச் 17-இல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வெப்பநிலை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) வரை அதிகபட்ச வெப்பநிலை, 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்ட விமான நிலையத்தில் 70 மி.மீ. மழை பதிவானது. தூத்துக்குடி (தூத்துக்குடி)- 40, பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), ராமநாதபுரம் -தலா 30 மி.மீ., காரைக்கால், திருவிடைமருதூா் (தஞ்சை), காரைக்கால்-தலா 20 மி.மீ. மழை பதிவானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப். 28 வரை மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகம், வடக்கு கடலோரத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு!
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
கோவை, நீலகிரி மாவட்டங்களில் மாா்ச் 28 வரை மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


