பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம் வழங்கப்படும் என தமிழக அரசின் அறிவித்துள்ளது.

cylinder

வணிக சிலிண்டர் - DPS

Published On :

சென்னை: நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள உணவகங்கள், டீக்கடைகளுக்கு யூனிட்டுக்கு ரூ.2 மின்சார மானியம் வழங்கப்படும் என்று மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

உணவு தயாரிக்கும் உணவகங்கள் எரிவாயுவுக்கு பதிலாக மின் அடுப்பு பயன்படுத்தியதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மின்சார மானியமாக யூனிட்டுக்கு ரூ.2 சலுகை அறிவித்துள்ளது தமிழக அரசு.

மேலும், தொழிற்சாலைகள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இசைவின்றி மாற்று எரிவாயுவை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிலிண்டர் தேவை, கையிருப்பு தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்திய நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், எரிவாயுவுக்கு பதில் மின் அடுப்பு பயன்படுத்துவதற்காக யூனிட்டுக்கு ரூ.2 மின்சார மானியமாக வழங்கப்படும். மத்திய அரசு அறிவித்துள்ள வணிக எரிவாயு சிலிண்டர் கட்டுப்பாடு இருக்கும் வரை இந்த சலுகை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு தட்டுப்பாட்டை சீர்செய்வது தொடர்பாக பலதரப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், உணவகங்களில் எதற்காக மின் பயன்பாடு அதிகரித்தது என்று ஆராயப்படாது என்றும் சென்னையில் மின் வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், நடுத்தர நிறுவனங்கள் மின் உபகரணங்களை கொள்முதல் செய்ய 25 சதவிகிதம், அதிகபட்சமாக ரூ.3.05 லட்சம் மானியத்துடன் கடன் வழங்கப்படும். நாடடில் உள்ள 60,698 தொழிற்சாலைகள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இசைவின்றி மாற்று எரிவாயுவைப் பயன்படுத்தலாம்.

பொது விநியோகத் திட்டத்தில் 3228 கிலோ லிட்டர் கூடுதல் மண்ணெண்ணெய் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இடையூறின்றி 194 உழவர் சந்தைகளில் விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்யலாம் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The Tamil Nadu government has announced that electricity subsidies will be provided to restaurants and tea shops.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.