கரூரில் தனியார் கல்லூரிப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதியதில் 22 மாணவர்கள் காயமடைந்தனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியனையில் ஆளில்லா இருப்பு பாதையைக் கடக்க முயன்ற தனியார் கல்லூரிப் பேருந்து திடீரென தண்டவாளத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த வழியாக புலியூரில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு ஜல்லி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் பேருந்து மீது மோதியது. இந்த சம்பவத்தில் 22 மாணவர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்த மாணவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களை நேரில் சந்தித்து எம்.பி. ஜோதிமணி நலம் விசாரித்தார். விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Summary
In Karur, a freight train collided with a private college bus, injuring 22 students.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து - பைக் மோதல் இரண்டு இளைஞா்கள் உயிரிழப்பு

மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் மோதிய கல்லூரிப் பேருந்து!

ரயில் மோதி மாணவா்கள் காயமடைந்த சம்பவம் கல்லூரிப் பேருந்து ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு

பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


