தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (மாா்ச் 16) இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், வடக்கு இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடலின் குமரிக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, நீலகிரி மாவட்டம் மற்றும் தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் திங்கள்கிழமை (மாா்ச் 16) இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
தென் தமிழகம், வடக்கு உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 17) இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் புதன்கிழமை (மாா்ச் 18) முதல் மாா்ச் 21 வரை இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில், திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வெப்பநிலை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை சற்று உயரக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தமிழகத்தில் ஏப். 10 வரை மழைக்கு வாய்ப்பு!

கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


