கரூர் பலி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணைக்காக, தில்லி சிபிஐ அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று(மார்ச் 17) ஆஜரானார்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடா்பான விசாரணைக்காக தில்லியில் சிபிஐ அலுவலகத்தில் மார்ச் 17-ஆம் தேதி ஆஜராக முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியிருந்த நிலையில், இன்று ஆஜரானார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் 27-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஜன. 12, ஜன. 19, மார்ச் 15 ஆகிய தேதிகளில் சிபிஐ அனுப்பிய அழைப்பாணையின்படி தில்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் விஜய் ஆஜராகி வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்.
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை விஜய் ஆஜராகி பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளித்தார். விஜய் மட்டுமல்லாமல், வேன் ஓட்டுநர்கள், ஹார்ட் டிஸ்க் கம்பெனி பொறியாளர்கள், வேலுசாமிபுரத்தில் விஜய்யுடன் நெருக்கமாக இருந்த பவுன்சர்கள் மற்றும் பலரிடமும் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தில்லி சிபிஐ அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று(மார்ச் 17) ஆஜரானார்.
நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி, சிபிஐ அதிகாரிகளின் கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளார்.
Summary
Former minister Senthil Balaji appeared at the CBI office in Delhi today (March 17) for questioning in the Karur murder case.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மு.க. ஸ்டாலின்தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்: செந்தில் பாலாஜி

என்ன, கரூர் சென்று செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லையா? ஏன்??

கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்!

கரூர் பலி: மார்ச் 17-ல் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு



