தனிநபர் ஒருவர் மீது வெறுப்பையும் தவறான தகவலையும் பரப்புவதாக பெயர் குறிப்பிடாமல் ஓர் அரசியல் கட்சியின் மீது நடிகை நிவேதா பெத்துராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் நடிகை நிவேதா பெத்துராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், உங்களின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் வெறுப்பையும் தவறான தகவலையும் ஒரு தனிநபர் மீது அதிகப்படுத்தினால், அது தலைவராகிய உங்களின் பொறுப்பே. தலைமைப் பண்பு என்பது பாரபட்சம் காட்டக்கூடிய ஒன்றல்ல.

நிவேதா பெத்துராஜ் - கோப்புப் படம்
தேர்தல் நேரத்தில் இந்தச் செயல்பாடு மோசமான விளைவுகளுக்குக் கீழே கொண்டு செல்வதாய் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏதோவொரு அரசியல் கட்சியின் ஐடி விங் செயல்பாட்டைக் குற்றம் சாட்டியுள்ள நிவேதா பெத்துராஜ், அது எந்தக் கட்சி என்று விவரிக்கவில்லை என்று இணையவாசிகள் குழப்பமடைந்துள்ளனர்.
மேலும், நிவேதா பெத்துராஜின் பதிவின்கீழ் இணையவாசிகள் ஒருவரையொருவர் மாறிமாறி கட்சிகளின் பெயர்களைக் கூறி, சண்டையிட்டும் கொண்டிருக்கின்றனர்.
தேர்தல் நேரத்தில் தனிநபர் ஒருவர் மீதான பொய்யான தகவல்கள் மோசமான விளைவுகளுக்கு வழி வகுக்கும் என்பதைத்தான் நிவேதா பெத்துராஜ் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரின் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ளாது, இதிலும் சிலர் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
Summary
Actress Nivetha Pethuraj accuses a political party of spreading false information about an individual
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுமிக்குத் தவறான சைகையால் தொல்லை கொடுத்தவா் கைது

அரசியல் சுமையாக மாறிவிட்டாா் ராகுல் - திமுகவைக் குறிப்பிட்டு பாஜக விமா்சனம்

சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்திய டெலிகிராம் முடக்கம்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கை தகவல்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


