திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

பெண்கள் குறித்து அவதூறு! டிஜிபி அலுவலகத்தில் விஜய் புகார்!

சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் சென்று புகார் அளித்தார்.

News image

டிஜிபி அலுவலகத்திற்கு வெளியே விஜய் - எக்ஸ்

Updated On :26 மார்ச் 2026, 8:02 pm IST

பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சென்று புகார் அளித்தார்.

தவெக மகளிர் பிரிவில் உள்ள பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பொன்ராஜ் பேசியிருந்ததற்கு விஜய் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.

அவருடன் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனும் உடன் இருந்தார்.

ஆளும் திமுக அரவணைப்பில் பொன்ராஜ் தொடர்ந்து பெண்கள் குறித்து அநாகரீகமாகப் பேசி வருவதாகவும், தமிழக மகளிரை கீழ்த்தரமாகப் பேசிவரும் பொன்ராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறை தலைமை இயக்குநரிடம் அளித்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆளும் தி.மு.க.வின் அதீத ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் பொன்ராஜ், தமிழகம் முழுவதும் இருக்கும் என் அம்மா, அக்கா, தங்கைகளான ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் பெண்கள் இனத்தையே விலைமாதர் என்று அர்த்தம் தொனிக்கும் சொல்லை நேரடியாகவேப் பயன்படுத்தி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்.

தமிழ்ப் பண்பாட்டில் பெரும் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரிய தாய்க்குலத் தங்கங்களைத் தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் பொன்ராஜ், ஆளும் கட்சியான தி.முக. தலைமையின் அரவணைப்பில் இருப்பதால் தன்னை யாராலும் கட்டுப்படுத்த இயலாது என்ற நினைப்பில் எல்லைக் கடந்து அநாகரிகமாகப் பேசி வருகிறார்.

இவ்வாறு, நம் தமிழக மகளிரை மிக மோசமாகப் பேசி வரும் இந்த நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

TVK Vijay files complaint at DGP's office

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.