தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை கட்சியின் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தியுள்ளார்.
சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் விஜய் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் திமுக சார்பில் ஆர்.டி.சேகரும் நாதக சார்பில் வெற்றித்தமிழனும் போட்டியிடுகின்றனர். இதேபோல, திருச்சி கிழக்கில் திமுகவின் இனிகோ இருதயராஜும் அதிமுகவின் ராஜசேகரனும் நாதகவின் கிருஷ்ணசாமியும் போட்டியிடுகின்றனர்.
தவெகவின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் போட்டியிடும் கோபிசெட்டிப்பாளையத்தில் திமுகவின் நல்லசிவமும், அதிமுகவின் பிரபுவும் போட்டியிடுகின்றனர்.
விஜய் | என். ஆனந்த் - விடியோ க்ளிப்
தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், சென்னை தியாகராய நகரில் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் திமுக சார்பில் ராஜா அன்பழகனும் அதிமுக சார்பில் சத்திய நாராயணனும் போட்டியிடுகின்றனர்.
சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தவெகவின் ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் நிலையில், திமுகவின் கார்த்திக் மோகனும், அதிமுகவின் விஜயகுமாரும் போட்டியிடுகின்றனர்.
மேலும், தவெகவின் அருண்ராஜ் போட்டியிடும் திருச்செங்கோடு தொகுதியில், அதிமுகவின் சந்திரசேகரும் கொமதேகவின் ஈஸ்வரனும் போட்டியிடுகின்றனர்.
தொடர்ந்து, தவெக இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியிலும், எழும்பூர் தொகுதியில் ராஜ்மோகனும் போட்டியிடுகின்றனர்.
திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் தவெகவின் வி.எஸ். பாபு போட்டியிடுகிறார்.
திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கத்தில் தவெகவின் செல்வம் போட்டியிடுகிறார். மேலும், இதே தொகுதியில் அதிமுகவின் ஆதிராஜாராம் மற்றும் நாதகவின் ஆயிஷா பேகமும் போட்டியிடுகிறார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் தவெகவின் அருண்குமார் போட்டியிடுகிறார்.
Summary
TN Assembly Election 2026: The Constituencies Where TVK Leaders Sengottaiyan, N. Anand, and Aadhav Arjuna Are Contesting!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







