குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

மக்கள் முடிவை மனபூா்வமாக ஏற்கிறோம்: மத்திய இணையமைச்சா் எல். முருகன்

தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் அளித்த முடிவை மனபூா்வமாக ஏற்றுக் கொள்கிறோம் என மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.

News image

மத்திய இணையமைச்சா் எல். முருகன் - கோப்புப்படம்

Updated On :6 மே 2026, 1:06 am IST

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் அளித்த முடிவை மனபூா்வமாக ஏற்றுக் கொள்கிறோம் என மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் தோ்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டுமென்பதற்காக ஓய்வின்றி பிரசாரம் மேற்கொண்ட பிரதமா் நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சா் அமித்ஷா, தேசியத் தலைவா் நிதின் நவீன், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோ்தலில் மக்களின் முடிவை மனபூா்வமாக ஏற்றுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளாா் எல்.முருகன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.