தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் நாளை(மே 7) முதல் மே 29 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாணவர் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள் https://www.tngasa.in/ என்ற இணையதளத்தில் மே 29 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
2026-2027 ம் கல்வியாண்டில், தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 126959 ( Shift – I – 101022/ Shift – II – 25937) சேர்க்கை இடங்கள் உள்ளன. மாணவர்கள் தாங்கள் விருப்பப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்
ஒரு மாணவருக்கு ரூ. 48,
பதிவுக் கட்டணம் : ரூ. 2.
SC/ST பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை. பதிவுக் கட்டணம் ரூ. 2 மட்டும் வசூலிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு /நெட் பேங்கிங்/யுபிஐ மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம்.
மாணவர்கள் விண்ணப்பங்களை வீட்டில் இருந்தோ அல்லது அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள மாணவர் சோ்க்கை உதவி மையம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
பாடப் பிரிவுகள் மற்றும் கல்லூரிகளை விரும்பும் வரிசையில் பதிவு செய்ய வேண்டும். தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிகளின் இணையதளங்களில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The Directorate of Collegiate Education has announced that students in Tamil Nadu can apply online for admission to government arts and science colleges until May 29.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நந்தா கலை, அறிவியல் கல்லூரிக்கு மத்திய அரசு ரூ.70 லட்சம் ஊக்க நிதி

வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான 2-ஆம் கட்ட தோ்தல் பயிற்சி

ஏற்காடு தொகுதியில் 15 ஆண்டுகளாக நிறைவேறாத அரசு கல்லூரி கோரிக்கை

வரவேற்பில்லாத இளநிலை பட்டப்படிப்புகள் நிறுத்தப்படலாம்! புதிய படிப்புகள்?
வீடியோக்கள்
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு


