காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

விஜய்யை வீழ்த்த இரண்டு திராவிட கட்சிகள் ஒன்றிணைகிறதா? காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு

தவெக தலைவர் விஜய்யை வீழ்த்த இரண்டு திராவிட கட்சிகள் ஒன்றிணைவதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பேச்சு

MK Stalin | Vijay | Edappadi Palaniswami

மு.க. ஸ்டாலின் | விஜய் | எடப்பாடி பழனிசாமி

Published On :

தவெக தலைவர் விஜய்யை வீழ்த்த இரண்டு திராவிட கட்சிகள் ஒன்றிணைவதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

தவெகவுடன் கூட்டணி அமைப்பதற்காக திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறிய நிலையில், காங்கிரஸ் மீது திமுகவினர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இதனிடையே, தவெக தலைவர் விஜய்யை வீழ்த்துவதற்காக திமுகவும் அதிமுகவும் ஒன்றிணைய முயற்சிகள் நடந்து வருவதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. இருப்பினும், இதுகுறித்து இரு கட்சிகளின் தலைமையில் எந்தத் தகவலும் இல்லை.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "இரண்டு திராவிட கட்சிகள். வாழ்நாள் எதிரிகள். ஒரே இரவில் ஒன்றானார்கள்.

தமிழகத்திற்காக இல்லை. மதச்சார்பின்மைக்காக இல்லை. ஒரே ஒரு மனிதனை நிறுத்த விஜய்யை. காங்கிரஸ் தெளிவாக பார்த்தது வெளியேறியது. ஆர்எஸ்எஸ் - பாஜகவின் பி அணியுடன் படுத்துக்கொண்டு உங்களை மதச்சார்பற்றவர் என்று சொல்ல முடியாது.

“நிலையான அரசு” என்பது இரண்டு பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தை காக்கும் அரசியல் மொழி. காங்கிரஸ் சரியாகவே வெளியேறியது.

திமுக இன்று தன் முகமூடியை கழற்றுமா? யார் துரோகி?" என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Are the Two Dravidian Parties Joining Forces to Defeat TVK Vijay?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.