தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு!

தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்துள்ளதைப் பற்றி...

News image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் - தவெக தலைவர் விஜய்.

Updated On :1 மணி நேரம் முன்பு

தமிழ்நாட்டில் புதிய அரசை அமைப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தவெக 108 இடங்களைப் பெற்றும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தொங்கு சட்டப்பேரவை உருவாகியுள்ளது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்திருக்கும் நிலையில் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை கோரியிருந்தது.

இதற்கிடையில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சியாக செயல்படுவதில்தான் விருப்பம் எனத் தெரிவித்திருக்கும் நிலையில், திமுகவின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கும் முனைப்பில் அதிமுக பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக விசிக, இடதுசாரிகள் தனித்தனியாக அவர்களது கட்சி செயற்குழுக் கூட்டங்களில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். மற்றொருபுறம், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் ஆலோசனை செய்து வருகிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் முடிந்த நிலையில், நேற்று ஆதரவு கேட்டு வந்த தவெக இணை பொதுச்செயலர் சி.டி.ஆர். நிர்மல் குமார், இன்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் புதிய அரசை அமைப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், ஆதரவு கடிதத்தை தவெக இணை பொதுச்செயலர் சி.டி.ஆர். நிர்மல் குமாரிடம் வழங்கினர்.

தவெக 108 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் 5 எம்.எல்.ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட் 2 எம்.எல்.ஏக்கள் என தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியின் பலம் 114 ஆக உயர்ந்துள்ளது.

இன்னும் பெரும்பான்மைக்கு இன்னும் 4 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை உள்ளது. இதற்கிடையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவகத்துக்கு செல்லும் விஜய், நன்றி தெரிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தவெக தலைவர் விஜய் இன்று மாலை 6.30 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

Summary

The Communist Party of India has announced unconditional support to the Tamilaga Vettri Kazhagam for forming a new government in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.