பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!

தமிழ்நாட்டில் உள்ள கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள் பற்றி...

Leemarose Martin, Joseph Vijay, Aadhav Arjuna

லீமாரோஸ் மார்ட்டின், ஜோசப் விஜய், ஆதவ் அர்ஜுனா - கோப்புப்படம்

Published On :

தமிழ்நாட்டில் பொறுப்பேற்றுள்ள கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளது.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) மற்றும் தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் அமைப்பு ஆகியவை 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 234 வேட்பாளர்களில் 233 பேரின் சுயவிவரப் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளன.

இதில், தமிழக வெற்றி கழகம் சார்பில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் டி. அருண்குமாரின் பிரமாணப் பத்திரம், இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் தெளிவாக இல்லாத காரணத்தால் ஆய்வு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வெற்றிபெற்றவர்களில் 193 (83%) எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள் ஆவர். மொத்த எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி ஆகும்.

அதிகபட்சமாக லீமாரோஸ் மார்ட்டின் (அதிமுக) – லால்குடி தொகுதி ரூ. 58,637 கோடி+, ச. ஜோசப் விஜய் (தவெக) – பெரம்பூர் / திருச்சிராப்பள்ளி (கிழக்கு) தொகுதிகள் - ரூ. 648 கோடி+, ஆதவ் அர்ஜுனா (தவெக) – வில்லிவாக்கம் தொகுதி - ரூ. 534 கோடி+.

குறைந்தபட்சமாக தாஹிரா (தவெக) – ஆம்பூர் தொகுதி - ரூ. 4 லட்சத்திற்கும் குறைவு, சிவக்குமார் கே. (தவெக) – மயிலம் தொகுதி - ரூ. 5 லட்சத்திற்கும் குறைவு, மாரிமுத்து கே. (இந்திய கம்யூ.) – திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதி - ரூ. 13 லட்சத்திற்கும் குறைவு.

வெற்றிபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 152.89 கோடி, தவெக ரூ. 27.09 கோடி, திமுக ரூ. 14.34 கோடி ஆகும்.

Summary

193 millionare MLAs in Tamil Nadu! Average Asset Value: Rs 48.35 Crore!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.