மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து! மே 3-ல் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வு ரத்து: தேசிய தேர்வு முகமைஅதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

அதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய்?

அதிமுக எம்.எல்.ஏ.க்களை முதல்வர் விஜய் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுவது பற்றி..

News image

அதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய் - கோப்புப்படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

சென்னையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அலுவலகத்துக்குச் சென்று அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களை முதல்வர் ஜோசப் விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதல் வலுவடைந்துள்ள நிலையில், சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க 17 எம்எல்ஏக்களும், எஸ்.பி.வேலுமணியை நியமிக்க 30 எம்எல்ஏக்களும் தனித்தனி அணிகளாக இடைக்கால சட்டப்பேரவைத் தலைவரிடம் திங்கள்கிழமை கடிதம் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த சி.வி. சண்முகம், தவெக ஆட்சிக்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக அறிவித்தார்.

இந்த நிலையில், சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி. சண்முகம் அலுவலகத்துக்கு இன்று பிற்பகல் 2 மணியளவில் நேரில் செல்லும் முதல்வர் விஜய், அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களை சந்திக்கவுள்ளதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, நேற்று முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், மதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சித் தலைவர்களை அவர்களின் வீட்டுக்கே நேரில் சென்று விஜய் சந்தித்தார்.

ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மட்டும் அவர் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Chief Minister Vijay Meets AIADMK MLAs!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.