திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு என சி.வி. சண்முகம் உறுதி...

News image

சி.வி. சண்முகம் தரப்பு - TNDIPR

Updated On :13 மே 2026, 9:06 am IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவளிக்கப் போவதாக முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவுக்குள் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க 17 எம்எல்ஏக்களும், எஸ்.பி. வேலுமணியை நியமிக்க 30 எம்எல்ஏக்களும் தனித்தனி அணிகளாக சட்டப்பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்துள்ளனர்.

இதனிடையே சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவளிக்கப் போவதாக சி.வி. சண்முகம் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி. சண்முகம் இல்லத்துக்கு நேற்று மாலை நேரில் சென்ற விஜய், தவெக ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்தித்துப் பேசியிருந்தார்.

இந்த நிலையில், அதிமுகவுக்கு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தவெகவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும், மீறினால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், இன்று காலை மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த சி.வி. சண்முகம், தவெகவுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக உறுதியாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சி.வி.சண்முகம் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

Summary

Support for TVK in Confidence Vote! — C.V. Shanmugam Faction

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.