8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு!

அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு பற்றி...

aadhav arjuna

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - x

Published On :20 மே 2026, 10:45 am IST

தவெக தலைமையிலான அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு இணைய வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. முதல்கட்டமாக முதல்வர் ஜோசப் சி. விஜய்யுடன் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்ட நிலையில், இந்த வாரத்துக்குள் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், அயோத்திதாச பண்டிதரின் பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் விஜய் இன்று மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வு முடிந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்து ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:

”அமைச்சரவை விரிவாக்கம் விரைவில் அறிவிக்கப்படும். சமூக நீதி கொள்கையுடைய அனைத்துக் கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும். காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெறுகிறது.

வெளியில் இருந்து ஆதரவு என்ற இடதுசாரிகளின் கொள்கையை நாங்கள் மதிக்கிறோம். விசிக மற்றும் ஐயூஎம்எல் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும்.

பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வர இபிஎஸ் முயற்சித்தார். மக்கள் தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்பட முயற்சித்ததால் அதிமுகவின் ஒரு பகுதியினர் எங்களுக்கு ஆதரவு கொடுத்தனர்.

திமுகவுடன் இணைந்தது வரலாற்றுப் பிழை, தற்கொலைக்கு சமம் என்று அவர்கள் கருதுகிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை நாங்கள் தோழமையுடன்தான் பார்க்கிறோம்.

இபிஎஸ், மு.க. ஸ்டாலின், உதயநிதி இணைந்து குதிரை பேர அரசியலை தொடங்கினார்கள். தனது கொள்கையை மறந்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க திமுக முயற்சித்தது” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

VCK and IUML invited to join the TN Cabinet - Aadhav Arjuna

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.