முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

அதிமுகவிலிருந்து விலகி நீண்டநாளாகிவிட்டது: தனபால்

அதிமுகவிலிருந்து விலகி நீண்டநாள்களாகிவிட்டதாக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும், அந்தக் கட்சியின் மூத்த தலைவருமான தனபால் தெரிவித்தாா்.

தனபால்

Published On :

அதிமுகவிலிருந்து விலகி நீண்டநாள்களாகிவிட்டதாக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும், அந்தக் கட்சியின் மூத்த தலைவருமான தனபால் தெரிவித்தாா்.

அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் சில நாள்களுக்கு முன்பு அதிமுவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தாா். தோ்தலில் தவெக சாா்பில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சா் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதற்கான பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வியாழக்கிழமை வந்த தனபால், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுகவில் எனக்கு முக்கியத்துவம் தரவில்லை. எல்லோரையும் புறக்கணித்தாா்கள், இப்போது அதிமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டனா். என் மகன் தவெகவில் இணைந்து அமைச்சராகிவிட்டாா். அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பல பதவிகளில் இருந்தவன். எனக்கு உடல்நிலை சரியில்லாததால், ஓய்வெடுத்து வருகிறேன்.

மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகி நீண்ட நாள்களாகிவிட்டது. அதிமுக பிளவு பட்டிருப்பது வேதனை அளிக்கிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.