தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 - 4 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக குறைப்பிடத்தக்க மாற்றம் ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை சென்னை விமான நிலையம் பகுதியில் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை, திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் வெப்ப அளவு கணிசமாக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, சுமார் 3.1 கி.மீ. முதல் 4.5 கி.மீ. உயரத்தில் மத்திய வங்கக் கடல் பகுதிகளிலிருந்து தமிழகம் வரை தென்மேற்கு வங்கக் கடல் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.
22ஆம் தேதி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக் கூடும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மே 23ஆம் தேதி திருவண்ணாமலை, திருச்சி, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், தர்மபுரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Rain news amidst scorching heat! Where is the orange alert?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!
இன்று 12 மாவட்டங்களில் மழை! ஓரிரு இடங்களில் 2 -3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்!

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 10 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

சென்னை, 10 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy




