செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்தது குறித்து...

News image

மு. வீரபாண்டியன் - DIN

Updated On :21 மே 2026, 1:31 pm IST

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

கடந்த மே 10 ஆம் தேதி நடைபெற்ற முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் மூன்றாவதாக இசைக்கப்பட்டது விவாதப்பொருளானது.

இதனைத் தொடர்ந்து, இனிவரும் காலங்களில் நிகழும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் முதலில் இசைக்கப்படும், இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி அளித்திருந்தார்.

இந்த நிலையில், மீண்டும் இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்க பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது.

இது குறித்து பேசிய மு. வீரபாண்டியன் தெரிவித்ததாவது:

அமைச்சர்களாக பொறுப்பேற்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள். ஆளுநர் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறித்திக் கேட்டுக்கொள்கிறோம். இந்தியாவின் பண், தேசியகீதம் எல்லாவற்றையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால், தமிழுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு சரியாக இருக்கிறது. முதல்வர் சரியாக இருக்கிறார்.

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும் என்று நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொளிகிறோம். எந்த இந்திய தேசியப் பாடலுக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. தேசிய கீதம் என அனைத்தையும் நாங்கள் உயர்வாக மதிக்கிறோம். அதேபோன்று, நான்கு ஐந்து நாட்டுப் பாடல்கள் இருந்தால் அவற்றையும் மதிக்கிறோம். ஆளுநரும் மத்திய அரசும் இது குறித்து சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Summary

M. Veerpandian, State Secretary of the Communist Party of India, has stated that the Governor must respect the sentiments of the Tamil people.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.