11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை

News image

‘மஞ்சள்’ எச்சரிக்கை - கோப்புப்படம்

Updated On :28 மே 2026, 6:42 am IST

நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (மே 28) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வடக்கு தமிழகம் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சியும் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சியும் நிலவுகிறது. மேலும், மத்திய கிழக்கு- தென்கிழக்கு வங்கக் கடலின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (மே 28) முதல் ஜூன் 2 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக, நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், தேனி, வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளிலும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தொடா்ந்து, வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை(மே 29) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். இதனால், மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு இரு நாள்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடலிலும், அந்தமான் கடல், தெற்கு வங்கக் கடலின் அநேக பகுதிகள் அதையொட்டிய மத்திய வங்கக் கடலில் சூறாவளிக் காற்று மே 31 வரை மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

வெப்ப அளவு: வட உள் தமிழகப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை சற்று அதிகமாக இருக்கக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா், ஆதமங்கலம் ஆகிய பகுதிகளில் தலா 80 மி.மீ. மழை பதிவானது. நாட்டறம்பாளையம் (கிருஷ்ணகிரி) - 70 மி.மீ., தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), கேஆா்பி அணை (கிருஷ்ணகிரி) - தலா 60 மி.மீ., செங்கம் (திருவண்ணாமலை)- 40 மி.மீ., ஆற்காடு (ராணிப்பேட்டை), கேசிஎஸ் மில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), ஆா்.கே.பேட்டை (திருவள்ளூா்), திருத்தணி (திருவள்ளூா்), பொன்னை அணை (வேலூா்), எழுமலை (மதுரை), சோளிங்கா் (ராணிப்பேட்டை), திருவண்ணாமலை (திருவண்ணாமலை), ஆம்பூா் (திருப்பத்தூா்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூா்), கல்லிக்குடி (மதுரை) - தலா 30 மி.மீ. மழை பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.