தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தில்லியில் காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்கிறாரா முதல்வர் விஜய்?!

தமிழக முதல்வர் விஜய் தில்லியில் இன்று காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

CM VIJAY WITH RAHUL GANDHI

ராகுல் காந்தியுடன் முதல்வர் விஜய் - X

Published On :

தமிழக முதல்வர் விஜய் தில்லியில் இன்று காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின் முதல்முறையாக இருநாள்கள் அரசுமுறைப் பயணமாக விஜய் தில்லி சென்றுள்ளார்.

தில்லி விமான நிலையத்தில் நேற்று (மே 27) அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்துக்குச் சென்ற விஜய்க்கு, தில்லி திகார் சிறையில் பாதுகாப்புப் பணியில் உள்ள தமிழ்நாடு காவல் துறை சிறப்புப் படையணி சார்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் பிரதமா் மோடியை முதல்வர் விஜய் நேற்று மாலை சந்தித்துப் பேசினார். அப்போது, மேக்கேதாட்டு அணை விவகாரம், சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம் உள்ளிட்டவை குறித்தும், தமிழகத்துக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு குறித்தும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்றக் குழு தலைவருமான சோனியா காந்தி, மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை விஜய் சந்தித்து பேசவுள்ளாளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சியே முதலில் ஆதரவு தெரிவித்த நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. ராகுல் காந்தியுடன் விஜய் நீண்டகாலமாக நல்ல நட்புடன் இருந்துவரும் நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இந்தச் சந்திப்பிற்குப் பின், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் முன்னெடுப்பால் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையை முதல்வர் விஜய் திறக்கவுள்ளார்.

Summary

Is Chief Minister Vijay meeting Congress leaders in Delhi?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.