பழைய சாலையைப் பெயா்த்து புதிய சாலை அமைக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி உத்தரவு!
பழைய சாலையின் தார் அடுக்குகளைத் தகுந்த இயந்திரங்கள் மூலம் முழுமையாக பெயா்த்து எடுத்த பிறகே புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டிருப்பது பற்றி....

கோப்புப்படம்.
பழைய சாலையின் தார் அடுக்குகளைத் தகுந்த இயந்திரங்கள் மூலம் முழுமையாக பெயா்த்து எடுத்த பிறகே புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி தனது பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையர் அக்டோபர் 27-ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், பேருந்து வழித்தடச் சாலைகளை மறுசீரமைக்கும் பணிகளைத் தொடங்குவதற்கு முன் துறையின் பொறியாளர்கள் தற்போதைய சாலையின் உயர அளவுகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். புதிதாக அமைக்கப்படும் தாரின் தடிமனுக்கு ஏற்ப, ஏற்கெனவே உள்ள தார் அடுக்கு அதே அளவிற்குச் பெயா்த்து எடுக்கப்பட வேண்டும்.
குடியிருப்புவாசிகள் அடிக்கடி சுட்டிக்காட்டும் புகாரான, சாலைகள் நாளடைவில் உயர்ந்து அருகில் உள்ள வீடுகள் மற்றும் நடைபாதைகளை விட உயரமாக மாறுவதைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு 'அறப்போர் இயக்கம்' அக்டோபர் 6-ஆம் தேதி அளித்த மனு மற்றும் அதைத் தொடர்ந்து கூடுதல் தலைமைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் இந்த சுற்றறிக்கையை 'அறப்போர் இயக்கம்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வரவேற்றுள்ளார். அதே வேளையில், இதில் சிமெண்ட் சாலைகள் சேர்க்கப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.300 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில், மாநகராட்சிப் பகுதியில் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை ரூ.154.16 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்புக் குழு பரிந்துரைப்படி முதல் கட்டமாக ரூ.130.19 கோடியில் சாலைப் பணிகள் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது. இதையடுத்து 595 தார்ச் சாலைகள் 136.57 கி.மீ. நீளத்தில் ரூ.120.65 கோடியிலும், ரூ.7.33 கோடியில் 8.47 கி.மீ. சிமெண்ட் காங்கிரீட் சாலைகளும், ரூ.2.21 கோடியில் 3.06 கி.மீ. தொலைவுள்ள 25 இன்டர்லாக் பேவ்மென்ட் பிளாக் சாலைகளும் என 15 மண்டலங்களிலும் மொத்தம் 148.10 கி.மீ. தொலைவுள்ள 678 சாலைகளை மேம்படுத்த தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
Summary
The Greater Chennai Corporation has directed its engineers to ensure road level is not raised by laying fresh bitumen on top of the existing roads, and to mill the surface wherever necessary before laying a new layer.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

