கனமழை: திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ. 2) விடுமுறை!
கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ. 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை - file photo
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முரசு புயல் நாளை தீவிரமடையக்கூடும் என்பதால் சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி, ஆகிய மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து 'முரசு' புயலாக உருவெடுத்துள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ. 2) விடுமுறை அளிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் கவிதா தெரிவித்துள்ளார்.
Summary
Heavy rain: Holiday declared for schools and colleges in Thiruvallur district tomorrow (Nov 2)!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

