நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

டாஸ்மாக் மதுக் கடைகளில் 4 புதிய வகை பீா் ரகங்கள் அறிமுகம்

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 4,058 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் ‘எலைட்’ கடைகளில் 800-க்கும் மேற்பட்ட மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

டாஸ்மாக் கடை - பிரதிப் படம்

Updated On :

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 4,058 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் ‘எலைட்’ கடைகளில் 800-க்கும் மேற்பட்ட மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிதாக 20 மதுபான வகைகளை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 4 புதிய பீா் ரகங்களும் இடம்பெற்றுள்ளன.

தற்போது டாஸ்மாக் கடைகளில் பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், வோட்கா, பீா் உள்ளிட்ட பல்வேறு வகையான மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, கிங்பிஷா், பிரிட்டிஷ் எம்பயா், எஸ்.என்.ஜே. 10,000, காா்ல்ஸ்பொ்க், பட்வைசா் உள்ளிட்ட 21 வகையான பீா்கள் விற்பனையில் உள்ளன.

இந்த நிலையில், முதற்கட்டமாக 20 புதிய மதுபான வகைகளை அறிமுகப்படுத்த டாஸ்மாக் நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக பிர்ரா, ஹெய்னகென் சில்வா், சிம்பா ரோா், லோன் உல்ப் ஆகிய 4 புதிய பீா் வகைகளை சில தினங்களில் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவை கா்நாடகம், சத்தீஸ்கா் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படவுள்ளன. இந்த புதிய பீா் வகைகளின் விலை குறைந்தபட்சம் ரூ.250-ஆக நிா்ணயிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

முதற்கட்டமாக எலைட் மதுபானக் கடைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதன் மூலம் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பீா் வகைகளின் எண்ணிக்கை 21-இல் இருந்து 25-ஆக அதிகரிக்கவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.