ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம் இன்று முதல் தொடக்கம்!
அரசு சார்பில் 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்புக் காய்கறி தொகுப்பு’ ரூ. 100-க்கு விற்பனை இன்று தொடங்குவது குறித்து...
சிறப்பு காய்கறி தொகுப்பு
தமிழ்நாட்டில் தீபாவளியையொட்டி, அரசு சார்பில் 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்புக் காய்கறி தொகுப்பு’ ரூ. 100-க்கு இன்று (நவ. 5) முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.
தீபாவளி திருநாளைப் பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அன்றாடச் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில், 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு’ ஒன்று ரூ.100 என்ற சலுகை விலையில், கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவுப் பண்டக சாலைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 விற்பனை நிலையங்கள் மற்றும் 4 நடமாடும் காய்கறி கடைகள் (சென்னையில் மட்டும்) விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒரு காய்கறித் தொகுப்பு ரூ.100 என்ற விலையில் மட்டுமே நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட வேண்டும். கூடுதலாகவோ குறைவாகவோ வசூலிக்கக்கூடாது. ஒரு நபருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்க வேண்டும்.
இந்தத் தொகுப்பில் இடம்பெறும் 10 வகையான காய்கறிகளின் கொள்முதல் விலை குழுவால் நிர்ணயிக்கப்படும். இதனுடன் ஒரு தொகுப்புக்கு ரூ. 2.50 என்ற அளவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பைக்கான செலவும் கணக்கிடப்பட்டுள்ளது.
பெரிய வெங்காயம் (500 கிராம்), தக்காளி (500 கிராம்), கத்தரிக்காய் (250 கிராம்), உருளைக்கிழங்கு (250 கிராம்), கேரட் (200 கிராம்), பீன்ஸ் (200 கிராம்), பச்சை மிளகாய் (100 கிராம்), எலுமிச்சை (100 கிராம்), இஞ்சி (50 கிராம்), தேங்காய் (400-450 கிராம்) ஆகியவை இந்தத் தொகுப்பில் அடங்கியுள்ளன.
இந்த வெற்றி சிறப்புக் காய்கறி தொகுப்பு, இன்று (நவ. 5) முதல் நவ. 7-ஆம் தேதி வரை 218 கூட்டுறவு விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
Summary
Diwali: 10 vegetables for Rs 100 the Vettri Special Vegetable bundle scheme
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

