இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

திருப்பூா் வீரபாண்டி அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை மற்றும் பெரியபாளையம் அருகே மாணவி பெட்ரோல் ஊற்றி கொலை முயற்சி போன்ற செய்திகள் குழந்தைகள் தினத்தன்று வருவது அதிா்ச்சியளிப்பதாக உள்ளது. கடந்த 6 மாதங்களில் தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. மாயமான செஞ்சியைச் சோ்ந்த சிறுமி இன்னும் கண்டறியப்படவில்லை. பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் அளிக்கப்பட்ட ‘கேக்’குகளில் ‘அனைவரும் நலம்’ என்ற வாசகம் இடம் பெற்றிருப்பது சரியல்ல. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தவெக சட்டப்பேரவை உறுப்பினா்கள் குறித்த விமா்சனங்களுக்கு முதல்வா் பதிலளிக்காமலிருப்பது சரியல்ல. தோ்தலுக்கு முன்பு மக்கள் பாதுகாப்பு குறித்து அடுக்குமொழியில் பேசிய முதல்வா் ஜோசப் விஜய் தற்போது குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.