தொழிலதிபரிடம் ரூ. 5.50 லட்சம் லஞ்சம் பெற்று இளைஞா் மீது பொய் வழக்கு: பெண் ஆய்வாளா், காவலா் பணியிடை நீக்கம்
தொழிலதிபரிடம் ரூ.5.50 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, இளைஞா் மீது பொய்யாக போக்ஸோ வழக்குப் பதிவு செய்ய உதவியதாக பெண் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி, காவலா் வசந்த்ராஜா ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

பணியிடை நீக்கம். - பிரதிப் படம்
தொழிலதிபரிடம் ரூ.5.50 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, இளைஞா் மீது பொய்யாக போக்ஸோ வழக்குப் பதிவு செய்ய உதவியதாக பெண் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி, காவலா் வசந்த்ராஜா ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த தொழிலதிபா் சுரேஷ் கண்ணன் (40), சென்னையில் வசித்து வருகிறாா். இவா், திருமணத்துக்காக இணையதளம் மூலம் பெண் தேடியபோது, கடலூா் மாவட்டம் நெய்வேலியைச் சோ்ந்த 28 வயது பெண் அறிமுகமாகியுள்ளாா். இருவரும் கைப்பேசி மூலம் பேசி வந்த நிலையில், சுரேஷ் கண்ணனின் வயது தனக்கு அதிகம் என்பதை அறிந்த அந்தப் பெண், திருமணத்துக்கு மறுத்து அவருடன் பேசுவதையும் நிறுத்தியுள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் கண்ணன், அந்தப் பெண்ணுக்கு தொடா்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளாா். இதையறிந்த அந்தப் பெண்ணின் தம்பியும், சென்னை அயப்பாக்கத்தில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவருமான ஸ்ரீராம் (23), இனிமேல் தனது சகோதரிக்கு தொல்லை கொடுத்தால் காவல் நிலையத்தில் புகாா் அளிப்பதாக சுரேஷ் கண்ணனை எச்சரித்துள்ளாா்.
இதற்கிடையே, ஸ்ரீராமையும் அவரது சகோதரியையும் பழிவாங்கத் திட்டமிட்ட சுரேஷ் கண்ணன், திருமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலா் வசந்த் ராஜாவின் உதவியை நாடியுள்ளாா். இருவரும் சோ்ந்து, புழல் பகுதியில் போதையில் தகராறில் ஈடுபட்ட 17 வயது சிறுமியை அணுகி, ஸ்ரீராமை காதல் வலையில் சிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளனா். இதற்காக சிறுமிக்கு ரூ.6 லட்சம் தருவதாகவும் உறுதியளித்துள்ளனா்.
அதன்படி, அந்தச் சிறுமியும் அவரது தோழியும் ஸ்ரீராமிடம் பழகி, சென்னை அண்ணா நகரில் உள்ள வணிக வளாகத்துக்கு அவரை வரவழைத்துள்ளனா். அப்போது, ஸ்ரீராம் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறி, திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமி புகாா் அளித்துள்ளாா்.
இந்தப் புகாரின் பின்னணியில் சுரேஷ் கண்ணனும், காவலா் வசந்த்ராஜாவும் இருந்தது விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அப்போதைய திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் விஜயலட்சுமியிடம் ரூ.5.50 லட்சம் லஞ்சம் கொடுத்து, ஸ்ரீராம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வைத்துள்ளதாகவும் தெரியவந்தது.
இதற்கிடையே, சுரேஷ் கண்ணன் தொடா்ந்து தொல்லை கொடுத்து வந்ததால், பாதிக்கப்பட்ட பெண் நெய்வேலி காவல் நிலையத்தில் அவா் மீது புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் போலீஸாா் சுரேஷ் கண்ணனை கைது செய்து விசாரித்தபோது, ஸ்ரீராமை பொய் வழக்கில் சிக்க வைக்க திட்டமிட்டது தொடா்பான விவரங்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, சென்னை காவல் ஆணையா் அமல்ராஜ் உத்தரவின்பேரில், தற்போது காத்திருப்போா் பட்டியலில் இருந்த ஆய்வாளா் விஜயலட்சுமி, காவலா் வசந்த்ராஜா ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மேலும், இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

