புத்தக கொள்முதல் முறைகேடு: நூலகத் துறை அதிகாரிகள் 5 பேர் பணியிடை நீக்கம்!
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூலகத்தில் புத்தக கொள்முதலில் ஏற்பட்ட முறைகேட்டில் அலுவலர்கள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...
அண்ணா நூற்றாண்டு நூலகம். - (கோப்புப்படம்)
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூலகத்தில் புத்தக கொள்முதலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அலுவலர்கள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட பெரியார் அறிவுலக நூலகத்திற்காக நூல்கள் தேர்வு செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டதில், தகுதியற்ற போலி புத்தகங்கள், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள், போலி நூலாசிரியர்கள் மற்றும் போலியான பதிப்பகங்கள் வாயிலாகப் பல கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்தன.
அதனைத்தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு, ஆய்வு செய்ததில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூலகங்களில் மோனிகா ரவி என்ற ஒரே எழுத்தாளரின் 162 புத்தகங்கள் உட்பட, லட்சுமி மோகன், தாமரை முரளி, ஜோதி ஹரிஹரன், திரிஷா விஜய், சங்கீதா விஜய் போன்ற பெயர்களில் பல புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன.
இந்த புத்தகக் கொள்முதல் முறைகேடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்கள் உள்பட நூலகங்களில் இருந்து சுமார் 70,000-க்கும் மேற்பட்ட போலி புத்தகங்கள் அகற்றப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நூல் கொள்முதல் விவகாரத்தில் நூலகத் துறை அலுவலர்கள் 5 பேரை பணியிடை நீக்கம் செய்து பொது நூலக இயக்குநரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
புத்தக கொள்முதல் கண்காணிப்பு குழுவில் உறுப்பினர்களாக இருந்த அண்ணா நூலக அதிகாரிகள் காமாட்சி, சந்தான கார்த்திகேயன், கலைஞர் நூலக அலுவலர்கள் தினேஷ்குமார், சந்தான கிருஷ்ணன் (பெரியார் நூலக பொறுப்பாளர்), பொது நூலகத் துறை அதிகாரி ஜுலியட் ஆகியோரைப் பணியிடை நீக்கம் செய்து பொது நூலக இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளது.
Summary
Five officials have been suspended in connection with irregularities in the procurement of books for the Anna Centenary Library in Chennai and the Kalaignar Library in Madurai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

