திருச்செந்தூர் சூரசம்ஹார விழா! அறநிலையத் துறை மீது சிவசேனை குற்றச்சாட்டு!
திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் சிவசேனை குற்றச்சாட்டு பற்றி..

சிவசேனை - video crop
திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் நிர்வாகக் குளறுபடிகள் ஏற்பட்டதாக அறநிலையத் துறை அதிகாரிகள் மீது சிவசேனை குற்றம் சாட்டியுள்ளது.
கோவை காந்திபார்க் பகுதியில் உள்ள பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில் சிவசேனை கட்சியின் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருநாளன்று மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அமைய வேண்டும் என வேண்டி, தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனை கட்சியினர்,
திருச்செந்தூரில் அண்மையில் நடைபெற்ற சூரசம்ஹாரத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற நிலையில், பக்தர்களுக்குப் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் குற்றம் சாட்டினர். குறிப்பாக, அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு வேண்டியவர்கள், குடும்பத்தினர், நண்பர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும், பக்தர்கள், நன்கொடையாளர்கள், உபயதாரர்கள் மற்றும் கட்டளைதாரர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
மேலும், சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது போதிய எல்.இ.டி திரைகள் மற்றும் ஒலிபெருக்கிகள் அமைக்கப்படாததால் பக்தர்கள் நிகழ்ச்சியைக் காண சிரமப்பட்டதாகவும், நேரடி ஒளிபரப்பிலும் பல்வேறு குறைபாடுகள் இருந்ததாகவும் குற்றம்சாட்டினர். பாடகர்கள் வேல்முருகன் மற்றும் புஷ்பவனம் குப்புசாமி ஆகியோரின் நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் அதிருப்தி தெரிவித்த அவர்கள், சூரசம்ஹார நிகழ்வில் முருகப்பெருமானின் சிறப்புகள் குறித்த வர்ணனைகள் போதுமான அளவில் இடம்பெறவில்லை எனத் தெரிவித்தனர்.
அதேபோல், பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் பிரசாதம் வழங்கிய தன்னார்வலர்களுக்கும் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதாகக் கூறினர். திருக்கோயில் நன்கொடைகள் பெறுவதில் அறநிலையத்துறை இணை ஆணையர் அருணாசலம் அதிகாரப் போக்குடன் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டிய சிவசேனை கட்சியினர், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், பாடகர் வேல்முருகனை அறநிலையத்துறை தேர்வுக் குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இனிவரும் காலங்களில் திருக்கோயில்களில் பாடகர்கள் வேல்முருகன் மற்றும் புஷ்பவனம் குப்புசாமி ஆகியோருக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கக்கூடாது என்றும் சிவசேனை கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


