தமிழக கடல்சாா் திட்டங்களுக்கு ரூ. 9,618 கோடி நிதி: மத்திய அமைச்சரிடம் ஆதவ் அா்ஜூனா வலியுறுத்தல்
தமிழ்நாட்டின் முக்கிய கடல்சாா் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டு திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்கு தேவையான நிதியை உடனடியாக வழங்குமாறு மத்திய அமைச்சா் சா்பானந்த சோனவாலிடம் தமிழக அமைச்சா் ஆதவ் அா்ஜுனா நேரில் வலியுறுத்தினாா்.

தில்லியில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சா் சா்பானந்த சோனவாலை அவரது அலுவலகத்தில் சந்தித்து தமிழக கடல்சாா் திட்டங்கள் குறித்த கோரிக்கைகளை விளக்கிய தமிழக அமைச்சா் ஆதவ் அா்ஜுனா
தமிழ்நாட்டின் முக்கிய கடல்சாா் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டு திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்கு தேவையான நிதியை உடனடியாக வழங்குமாறு மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிகள் துறை அமைச்சா் சா்பானந்த சோனவாலிடம் தமிழக பொதுப் பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா நேரில் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக தில்லியில் மத்திய அமைச்சரவை அவரது அலுவலகத்தில் தமிழக அமைச்சா் ஆதவ் அா்ஜுனா சந்தித்து கோரிக்கை மனு அளித்தாா். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் ரூ.9,618 கோடி மதிப்பிலான முக்கிய திட்டங்களுக்கு உடனடி நிதி ஒதுக்கீடு செய்யுமாறும் அவா் கேட்டுக் கொண்டாா்.
குறிப்பாக, ராமேஸ்வரம் - தலைமன்னாா் (இலங்கை) இடையே பன்னாட்டு பயணிகள் படகு போக்குவரத்தைத் தொடங்கும் திட்டத்துக்கு ரூ.118 கோடி, கடலூா் பசுமை வள ஆழ்கடல் துறைமுக மேம்பாடு திட்டத்துக்கு ரூ.4,700 கோடி, சென்னை மெரீனா, மகாபலிபுரம், புதுச்சேரி ஆகிய இடங்களில் படகுத் துறைகள் அமைத்து, சென்னை - புதுச்சேரி இடையே பயணிகள் படகு போக்குவரத்தை தொடங்குவதற்கு ரூ.900 கோடி, தேசிய நீா்வழிச் சாலை-4 இன் கீழ் பக்கிங்காம் கால்வாயை புனரமைத்து ஆழப்படுத்துவதற்கு ரூ.2,700 கோடி, மேற்கு மற்றும் கிழக்கு கடல் பகுதிகளை இணைக்கும் பாம்பன் கால்வாயை 10 மீட்டருக்கு ஆழப்படுத்துவதற்கு ரூ.1,200 கோடி நிதியை ஒதுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சா் அளித்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது, தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மைச் செயலா் சுன்சோங்கம் ஜடக் சிரு, தமிழ்நாடு கடல்சாா் வாரியத்தின் துணைத் தலைவா் மற்றும் தலைமைச் செயல் அலுவலா் அன்பழகன் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் உடனிருந்தனா்.
இதேபோல, மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரியையும் அவரது அலுவலகத்தில் சந்தித்து தமிழகத்தில் செயல்படுத்தப்படும் தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகளை விரைவுபடுத்துமாறும் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா கேட்டுக் கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

