திருப்பரங்குன்றம் தீபம்! தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தலாம்!திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!திருப்பரங்குன்றம்: நிபந்தனையுடன் தீபமேற்ற உச்சநீதிமன்றம் அனுமதிகாவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்முதல்வர் விஜய் தலைமையில் நவ. 25-இல் முதலீட்டாளர்கள் மாநாடு!கீர்த்தனாதான் தவெக அரசின் துரந்தரா? எடப்பாடி பழனிசாமி கேள்விகாவிரி நீரை திறந்துவிடுமாறு உத்தரவிடக் கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி! உச்ச நீதிமன்றம்

பதிப்பகம் துவங்கும் எழுத்தாளர் சங்கம்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் ’ஸ்வான் பப்ளிகேஷன்ஸ்’ பற்றி...

swan

ஸ்வான்

Updated On :

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் ‘ஸ்வான் பப்ளிகேஷன்ஸ்’ என்ற பதிப்பகம் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தென்னிந்திய திரைப்பர எழுத்தாளர்கள் சங்கம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

"ஸ்வான் பப்ளிகேஷன்ஸ் (Swan Publications) மூலம் உலகெங்கிலும் வளரும் புதிய எழுத்தாளர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து அறிமுகம் செய்ய எழுத்தாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

பேசப்பட வேண்டிய, மக்களுக்கான புத்தகங்களாக இருக்கும் பட்சத்தில், அந்த எழுத்தாளர்களுக்கான பொற்காலத்தை துவக்கி வைக்க, அவர்களின் முகவரியாக நின்று படைப்புகளை வெளியிட எழுத்தாளர்கள் சங்கம் முன்வருகிறது.

கதைகள், சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள் என எந்தப் புத்தகமாக இருந்தாலும் சிறந்த படைப்பாக, போற்றத்தக்கதாக தகுதியுடன் இருக்கவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், படைப்புகளை தேர்வு செய்யும் குழுவில் எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகர், பாஸ்கர் சக்தி, சேரன், சமுத்திரக்கனி, அஜயன்பாலா, கவிஞர்கள் சினேகன், தாமரை, பழனிபாரதி ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Writers' Association to launch a publishing house

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.