தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி பற்றி...

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி
தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று அவர் அளித்த பேட்டியில், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, மேகேதாட்டு பிரச்னை, நிர்வாகக் கோளாறு, தொழிற்சாலைகள் அண்டை மாநிலத்திற்குச் செல்வது எனப் பல பிரச்னைகள் உள்ளன. இந்த ஆட்சியில் என்ன திட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள்? நாங்கள் இந்த ஆட்சியைக் கவிழ்க்கத் தேவையில்லை.
தானாகவே இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும். மக்கள் இந்த ஆட்சியைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார்கள். கரூரில் பலியான 41 பேரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் துக்கத்தில் இருந்தவர்களை வீட்டிற்கு வரவழைத்து நலம் விசாரித்தது எங்குமே இல்லாத அளவிற்குத் தமிழக முதல்வர் செய்த செயலாகும்.
இந்த ஆட்சி போகும் என்றால் மின்வெட்டு மூலமாகத்தான் போகும் என்று அப்போது திமுக ஆட்சி குறித்து ஜெயலலிதா சொன்னார். நாங்கள் தேர்தல் பிரசாரத்தில் தடையில்லா மின்சாரம் கிடைக்கும் என்று வாக்குறுதி அளித்தோம். அதன்படி 24 மணி நேரமும் மின்சாரம் கொடுத்தது அதிமுக ஆட்சி. தற்போது எந்த நிர்வாகமும் இல்லை.
20 ரூபாய்க்கு மின்சாரம் கொள்முதல் செய்ததை ஊழல் என்று சொன்னோம். தற்போது 37 ரூபாய்க்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு ஊழல் நடைபெற்றிருக்காதா? என்று தெரிவித்தார்.
Summary
"AIADMK General Secretary Edappadi Palaniswami has stated that the TVK government will collapse on its own."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


