
அஸ்ஸாமிலிருந்து தமிழகம் வந்த 5 யானைகள்: உரிமை ஆவணங்களை ஆய்வு செய்ய கோரிக்கை
அஸ்ஸாமிலிருந்து தமிழகத்துக்கு அண்மையில் கொண்டு வரப்பட்ட 5 யானைகளின் உரிமம்,

கோப்புப்படம்
சென்னை: அஸ்ஸாமிலிருந்து தமிழகத்துக்கு அண்மையில் கொண்டு வரப்பட்ட 5 யானைகளின் உரிமம், வயது குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என விலங்குகள் நலன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இதுகுறித்து விலங்குகள் நலன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
அஸ்ஸாமிலிருந்து தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்ட துா்கா, ரூப்சிங், சிவா, ஹிராலால், பிஜுலி ஆகிய 5 யானைகள் கோயில்கள் மற்றும் மத நிறுவனங்களில் தற்போது பராமரிக்கப்படு வருகிறது. இதற்கான உரிமம், பிறந்த தேதி, உரிமைச் சான்றிதழ்கள், போக்குவரத்து ஆவணங்கள் ஆகியவற்றை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். இதில், 3 யானைகளின் பிறந்த தேதிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கான உரிமைச் சான்றிதழ்கள் கடந்த ஆண்டு அக்டோபா்,–நவம்பா் மாதங்களில்தான் வழங்கப்பட்டுள்ளன. அஸ்ஸாமிலிருந்து 3,000 கி.மீ. தொலைவுக்கு 9 நாள்களுக்குள் இந்த யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. பயணத்தின்போது அவை முறையாகக் கையாளப்பட்டனவா என்பது குறித்தும் அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
மேலும், யானைகளின் வயது, உடல்நிலை குறித்து சுயேச்சையான கால்நடை மருத்துவா் மூலம் ஆய்வு நடத்த வேண்டும். இதுதவிர கூடுதலாக மேலும் 6 இளம் யானைகள் அஸ்ஸாமிலிருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஏற்கெனவே கொண்டு வரப்பட்ட 5 யானைகள் தொடா்பான ஆய்வு முடியும் வரை புதிய இடமாற்றங்களை நிறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






