மத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்கருணாநிதி, ஜெயலலிதா முதல் விஜய் வரை... தமிழ்நாட்டோடு தொடரும் பயணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை! 1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு செயல்படுகிறது: முதல்வர் விஜய்அமைதியான முறையில் கூடுபவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கை கூடாது: உச்ச நீதிமன்றம்சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! குழந்தைகள் நாள்: பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு!சௌதி அரேபிய விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

கருணாநிதி, ஜெயலலிதா முதல் விஜய் வரை... தமிழ்நாட்டோடு தொடரும் பயணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை!

ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைப் பிரதமர் மோடியும், முதல்வர் விஜய்யும் இணைந்து தொடங்கி வைத்திருப்பது பற்றி...

From Karunanidhi and Jayalalithaa to Vijay... My ongoing journey with Tamil Nadu: PM Modi's heartfelt speech!

பிரதமர் மோடி, முதல்வர் விஜய்.

Published On :

முதல்வர் விஜய்யோடு இணைந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றுவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைப் பிரதமர் மோடியும், முதல்வர் விஜய்யும் இணைந்து சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று தொடங்கி வைத்தனர். அதில் மெட்ரோ ரயில், நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள் உள்ளிட்ட துறைகளின் திட்டங்கள் அடங்கும். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "எனது தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம்" எனத் தமிழில் கூறித் தனது உரையைத் தொடங்கினார். மேலும் அவர் பேசுகையில், "நமது நாட்டுக்கு இன்று சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். புண்ணிய பூமியான தமிழ்நாட்டில் அனைவருக்கும் எனது நவராத்திரி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நவராத்திரி தொடக்க விழாவில் இந்தப் புண்ணிய பூமியில் இருப்பது பெருமையாக உள்ளது. தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்குப் பல வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, தொழில் துறையையும் வலுப்படுத்தும்.

சிவபெருமானின் புனித பூமியான தமிழ்நாட்டில் நான் ஜலகண்டேஸ்வரரின் நல்லாசிகளைப் பெற்றேன். ஆலயம் முதல் மெட்ரோ வரை, நாட்டின் கலாசார சக்தி தமிழ்நாட்டில் வெளிப்படுகிறது. உங்கள் நல்லாசியுடன் எனது 25 ஆண்டு கால மகத்துவமான பயணம் நிறைவடைந்துள்ளது. நாட்டின் குடிமக்கள் மற்றும் கூட்டுறவு கூட்டாட்சி மீதான நம்பிக்கை மேலும் வலுப்பெற்று வந்துள்ளது. முதல்வராக இருந்த காரணத்தால், மாநிலங்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்து நான் செயல்படுகிறேன். குஜராத் முதல்வராக இருந்தபோது கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பிரதமராகப் பதவியேற்ற பிறகு ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அரசுகள் மாறிக்கொண்டு இருந்தன.

ஆனால் தமிழ்நாட்டின் வளர்ச்சியும், இங்கிருக்கும் மக்களுக்கு சேவை செய்யும் எனது மன உறுதியும் எப்போதும் தொடர்ந்து இருந்து வந்தது. இன்று இதே உறுதிபாட்டோடு கூடவே முதல்வர் விஜய்யுடன் இணைந்து தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சி பயணத்தை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருக்கிறோம். நகரமயமாக்கல் என்பது ஒரு சவால் அல்ல, அது ஒரு வாய்ப்பு. போக்குவரத்து துறையை மேம்படுத்தினால் மக்களின் வாழ்க்கை முறை எளிதாகும். சிறப்பான போக்குவரத்திற்குச் சாலையை மட்டும் விரிவாக்கம் செய்தால் போதாது; உட்கட்டமைப்பும் மிகவும் முக்கியம். தற்போது நாட்டின் 25 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. 2014ஆம் ஆண்டில் மெட்ரோ வலைப்பின்னல் 250 கி.மீ. தூரமாக மட்டுமே இருந்தது. தற்போது அது 1,100 கி.மீ. வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ வலைப்பின்னல் விரிவாக்கம் மூலம் அனைவருக்கும் போக்குவரத்து வசதி எளிதாகியுள்ளது.

மாநிலங்களைச் சக்தி படைத்தவையாக மாற்றுவதன் மூலமே தேசத்தைச் சக்தி படைத்தவையாக மாற்ற முடியும். தமிழ்நாட்டில் உற்பத்தித் துறையை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உள்ளூர் தயாரிப்புப் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் அவற்றை ஊக்குவிக்க வேண்டும். செல்போன் உற்பத்தியில் இந்தியா உலகின் 2ஆவது நாடாக உயர்ந்துள்ளதுடன், மின்னணு பொருட்களின் உற்பத்தியும் 16 மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டின் உற்பத்தித் துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் இருந்து பாதுகாப்புத் தளவாடங்களின் ஏற்றுமதி 50 மடங்கு அதிகரித்துள்ளது. பலமான உற்பத்தித் துறையை உருவாக்க நல்ல சாலை வசதிகள், ரயில்வே மற்றும் துறைமுகங்கள் அவசியமாகும். புதிதாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் ஊக்கம் அளிக்கும்" என்று தெரிவித்தார்.

Summary

PM Modi stated that he will work together with Chief Minister Vijay for the development of Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.