தவெக ஆட்சியில் பணவீக்கம், விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம்: மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!காஞ்சிபுரத்தில் இந்தியாவிலேயே சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையம்! ஜனவரியில் திறந்து வைக்கிறார் முதல்வர்!ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசுமின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்பு

அடுத்த 2 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இரவு 7 மணிவரை மழைக்கான வானிலை முன்னறிவிப்பு.....

மழை - பிரதிப் படம்

Published On :

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணிநேரத்துக்கு(இரவு 7) 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும், மேலும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது-

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் மேலும் கூறியிருப்பதாவது, அடுத்த 2 நாட்களில் நாட்டின் எஞ்சிய பகுதிகளில் இருந்து தென்மேற்குப் பருவமழை முழுவதுமாக விலகுவதற்கான சூழல் உருவாகி வருகிறது, அதே நேரத்தில் வடகிழக்குப் பருவமழை தென்னிந்தியாவின் தென்பகுதிகளில் தொடங்குவதற்கான சாதகமான நிலை காணப்படுகிறது.

சுமார் 3.1 கிமீ உயரம் வரை தெற்கு ஸ்ரீலங்கா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

சுமார் 3.1 கிமீ உயரம் வரை தெற்கு ஸ்ரீலங்கா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து மத்திய வங்கக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை (அக்.14): ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருவண்ணாமலை, கல்லக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (அக்.13): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27- 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (அக்.14): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The Chennai Meteorological Centre has stated that there is a chance of rain in 7 districts of Tamil Nadu over the next 2 hours (by 7 PM).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.