மீனவர்களை மீட்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்
மாலத்தீவு கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 25 தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கவும் அவர்களின் 3 மீன்பிடி விசைப் படகுகளை மீட்கவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள், அவர்கள் பயன்படுத்திய மூன்று மீன்பிடி விசைப்படகுகளுடன், மாலத்தீவு கடலோரக் காவற்படையினரால் 13.10.2026 அன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தலையிட்டு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் தமிழ்நாடு முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இவ்விவகாரம் தொடர்பாக மாலத்தீவு அரசுடன் தூதரகத்தின் வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கவும், அவர்களது மீன்பிடி விசைப்படகுகளை உடனடியாக மீட்பதற்கும், மீனவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதல்வர் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்த விவகாரத்தில் தலையிட்டு, தக்க நடவடிக்கை மேற்கொள்வது, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்திற்கும் மிகுந்த நம்பிக்கையையும் ஆறுதலையும் அளிக்கும் என தமிழ்நாடு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
Summary
Tamil Nadu Chief Minister C. Joseph Vijay has written to Union Minister of External Affairs S. Jaishankar, requesting him to take the necessary steps to secure the release of 25 fishermen from the Thoothukudi district of Tamil Nadu—who have been arrested by the Maldivian Coast Guard—and to recover their three fishing vessels.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


