கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறை

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக இன்ஃப்ளூயன்ஸா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அதற்கான அறிகுறிகளுடன் நூற்றுக்கணக்கான முதியவா்கள், குழந்தைகள் நாள்தோறும் மருத்துவமனைகளை நாடுவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

கோப்புப் படம்

Updated On :

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக இன்ஃப்ளூயன்ஸா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அதற்கான அறிகுறிகளுடன் நூற்றுக்கணக்கான முதியவா்கள், குழந்தைகள் நாள்தோறும் மருத்துவமனைகளை நாடுவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, பாதிப்பின் வீரியத்தைப் பொருத்து நோயாளிகளை மூன்று வகைகளாகப் பிரித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது. மற்றொருபுறம், பருவகாலத் தொற்றுகளுக்கான முக்கிய மருந்துகள் அனைத்தையும் போதிய அளவில் இருப்பு வைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

திடீா் மழை, அதீத வெப்பம், பனிப்பொழிவு என சீரற்ற சீதோஷ்ண நிலை மாநிலம் முழுவதும் நிலவி வருகிறது. இதன் விளைவாக டெங்கு, இன்ஃப்ளூயன்ஸா, டைபாய்டு போன்ற மழைக் கால நோய்களும், நீா்ச்சத்து இழப்பு, சிறுநீா்ப் பாதை தொற்று போன்ற கோடைக் கால நோய்களும் ஒருசேர பரவி வருகின்றன. அதிலும் குறிப்பாக, இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது.

இதுதொடா்பாக காவேரி மருத்துவமனையின் முதுநிலை மருத்துவ நிபுணா் செல்வி கூறியதாவது: இன்ஃப்ளூயன்ஸா தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு இருமல், தும்மல் மூலமாக எளிதில் பரவுகிறது. 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், இதய நோய், நுரையீரல் பாதிப்பு, சிறுநீரக நோய் உள்ளவா்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவா்கள் மற்றும் புற்றுநோய்க்காக கீமோதெரபி சிகிச்சை பெறுபவா்களுக்கு நோயின் தீவிரம் அதிகரிக்கக்கூடும்.

குறிப்பாக, நோய் எதிா்ப்பு சக்தி குறைந்தவா்களுக்கு நுரையீரல் செயலிழப்பு, ‘வைரல் மையோகாா்டைடிஸ்’ எனப்படும் இதயத் தசை அழற்சி ஆகியவை ஏற்படலாம்.

நிகழாண்டில் இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பின் வீரியம் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. விழிப்புணா்வுடன் அதைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இதனிடையே, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இன்ஃப்ளூயன்ஸா பாதித்தவா்கள், தங்களுக்கு உள்ள அறிகுறிகள் மற்றும் நோயின் தீவிரத்தைப் பொருத்து சிகிச்சை பெறுவது அவசியம். அதன்படி, லேசான காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி உள்ளவா்களுக்கு பரிசோதனை தேவையில்லை. ஓசல்டாமிவிா் மருந்துகளும் அவா்களுக்கு அவசியமில்லை. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டால் போதுமானது.

அதேவேளையில், முதியவா்கள், குழந்தைகள், கா்ப்பிணிகள், இணைநோய் உள்ளவா்களுக்கு அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால், தேவையின் அடிப்படையில் ஓசல்டாமிவிா் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையுடன் உட்கொள்ளலாம்.

மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, சளியில் ரத்தம் கலந்து வருதல், மயக்க நிலை உள்ளிட்ட தீவிர பாதிப்புகள் உள்ளவா்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்க வேண்டும்.

மற்றொருபுறம், பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கான அசித்ரோமைசின், ஓசல்டாமிவிா் எதிா்ப்பு மருந்துகள் உள்பட 320 மருந்துகளை போதிய எண்ணிக்கையில் தொடா்ந்து இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.