அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை தொடரும்!
இரவு 7 மணி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

மழை - கோப்புப்படம்
அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 3.1 கி.மீ. முதல் 4.5 கி.மீ. உயரம் வரை தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை தெற்கு கடலோர ஆந்திர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.
இதன் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) செங்கல்பட்டு, தருமபுரி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அரியலூர், சென்னை, கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருச்சி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The Chennai Meteorological Centre has stated that rain will continue in most districts of Tamil Nadu for the next 3 hours.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


