திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறித்து...
திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை! - கோப்பிலிருந்து...
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை(அக். 17) மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று(அக். 16) மிக கனமழை பெய்யக்கூடும்.
மேலும், திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை(அக். 17) திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Summary
The Chennai Meteorological Centre has stated that an orange alert for very heavy rainfall has been issued for six districts, including Thiruvallur and Kanchipuram, for tomorrow (Oct. 17).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

