எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை இன்றுமுதல் தொடக்கம் விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா

எஸ்ஐஆர் விவகாரத்தில் ஆ. ராசா அளித்த விளக்கம் பற்றி....

DMK has been opposing the SIR right from the beginning: A. Raja

ஆ. ராசா

Updated On :

எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது என்று திமுக துணைப் பொதுச் செயலரும், எம்.பி.யுமான ஆ. ராசா தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், தலைவர் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நீங்கள் படித்திருப்பீர்கள்.

குறிப்பாக, எஸ்ஐஆர்(வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள், தமிழக வெற்றிக் கழகத்தோடு இணைந்திருக்கிற சில அரசியல் கட்சிகள் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள் என்பதற்காக, திராவிட முன்னேற்றக் கழகம் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று திமுகவின் மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்கள். எஸ்ஐஆர்-க்கு நாங்கள் ஆதரவாக இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தார்கள்.

ஆனால், எஸ்ஐஆர் கொண்டுவரப்பட்ட காலத்திலிருந்தே திராவிட முன்னேற்றக் கழகம்தான் அழுத்தம் திருத்தமாக நாடாளுமன்றத்திற்குள்ளும் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம். சில மாநில முதல்வர்கள் சென்னைக்கே வந்து இது குறித்து விவாதித்து, தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

தொடர்ந்து எஸ்ஐஆர்-ஐ எதிர்த்து, அதனால் ஏற்படும் பாதிப்புகளை அம்பலப்படுத்தி வருகின்ற பிரதான அரசியல் கட்சியாக இந்தியாவில் திராவிட முன்னேற்றக் கழகம் இருந்தது என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்.

காலவரிசைப்படி திராவிட முன்னேற்றக் கழகம் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்தது என்பதை, இந்தத் தீர்மானத்தின் வாயிலாகத் தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்திய அரசியல் ஆர்வலர்களுக்கும் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இன்றைய தினம் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம்.

அந்தத் தீர்மானத்திலேயே காங்கிரஸ் கட்சியினுடைய நிலைப்பாடு என்ன, எங்களைக் கேள்வி கேட்பதற்கான தார்மீக உரிமை அவர்களுக்கு இருக்கிறதா என்பதையும் நாங்கள் கேள்வி எழுப்பியிருக்கிறோம்.

எனவே, எஸ்ஐஆர் கொண்டுவரப்பட்ட காலத்திலிருந்து எந்தவிதமான தடுமாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ஒரே மாதிரியான நிலைப்பாட்டை எடுத்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதற்காகத்தான் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம் என்று தெரிவித்தார்.

Summary

DMK has been opposing the SIR from the very beginning: DMK Deputy General Secretary and MP A. Raja

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER