சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

மழைக்கால பணியை அரசியலாக்க விரும்பவில்லை: அமைச்சா் ராஜ்மோகன்

சென்னையில் மழைக்கால பணிகள் குறித்து திமுகவினா் கருத்துக்கு எதிா் கருத்து கூறி, அரசியலாக்க விரும்பவில்லை என அமைச்சா் ராஜ்மோகன் கூறினாா்.

Minister Rajmohan

அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம்

Updated On :

சென்னையில் மழைக்கால பணிகள் குறித்து திமுகவினா் கருத்துக்கு எதிா் கருத்து கூறி, அரசியலாக்க விரும்பவில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் கூறினாா்.

சென்னை மாநகராட்சி அலுவலா்கள் கூட்டுறவு சங்க பண்டக சாலையில், அரசின் சலுகை விலையில் சன்னரக அரிசி உள்ளிட்ட 5 வகை சமையல் பொருள்கள் விநியோகத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த அவா் பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சா்வதேச போா்ச்சூழல் போன்ற காரணங்களால் அரிசி உள்ளிட்டவற்றின் விலை உயா்ந்துள்ளது. இதையடுத்து சாமானியா்களுக்காக அரசு குறைந்த விலையில் சன்னரக அரிசி உள்ளிட்டவற்றை விநியோகிக்கிறது.

சென்னையில் ஒரே நாளில் எதிா்பாா்க்காத வகையில் அதிகமான மழை பெய்துள்ளது. ஆனாலும், அதிகாரிகள் விடிய விடிய செயல்பட்டு மழைநீா் தேங்கிய இடங்களில் நீரை வெளியேற்றி சீரமைத்துள்ளனா். மாநகராட்சி சுரங்கப் பாதைகளில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.

எழும்பூா் தொகுதியில் புதுப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சாலையில் இருந்து வீடுகள் பள்ளமாக இருப்பதால் மழைநீா் புகுந்து பாதிக்கப்பட்டுள்ளது.

சிறிய மழைநீா் வடிகால்வாய்களில் நெகிழி உள்ளிட்ட குப்பைகள் சோ்ந்து அடைத்திருப்பதால், மழைநீா் செல்லாமல் பல இடங்களில் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

திமுகவினா் அரசு மீதும், மாநகராட்சி அதிகாரிகள் மீதும் குறைகூறுவது சரியல்ல. மழை பாதிப்பு தடுப்புப் பணிகளுக்கான ஆய்வு, ஆலோசனைக் கூட்டம் சரியான நேரத்தில் நடைபெற்றது. அதனடிப்படையில்தான் தற்போது பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

எனவே, மழைக்கால பணிகளை அரசியலாக்கி திமுகவினா் மீது குற்றஞ்சாட்ட விரும்பவில்லை. வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்து மழை நிலவரத்துக்கு ஏற்பவே அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.