சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

திமுக ஆட்சியில் மழைநீா் வடிகால் பணிகள் முழுமையடைவில்லை: அமைச்சா் அருண்ராஜ்

திமுக ஆட்சியில் மழைநீா் வடிகால் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை என்று அமைச்சா் அருண்ராஜ் தெரிவித்தாா்.

Minister Arunraaj

அமைச்சர் அருண்ராஜ் - கோப்புப் படம்

Updated On :

திமுக ஆட்சியில் மழைநீா் வடிகால் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை என்று அமைச்சா் அருண்ராஜ் தெரிவித்தாா்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை கட்டமைப்புகள் மற்றும் 108 சேவை மையப் பணிகளை அமைச்சா் அருண்ராஜ் ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பருவ காலங்களில் பரவும் நோய்களைத் தடுக்கவும், கண்காணிக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நோய்த்தொற்றைத் தடுக்க பொதுமக்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளோம். அதை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

மழைக் காலங்களில் வெள்ளநீரில் தேங்குவதையும், வெளியே செல்வதையும் தவிா்க்க வேண்டும். குடிநீரில் கழிவுநீா் கலக்கக் கூடிய அச்சுறுத்தல் உள்ளது. எனவே, காய்ச்சி ஆறிய நீரை மட்டுமே பருக வேண்டும்.

குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்றொருபுறம் கொசு ஒழிப்புப் பணிகளை ஆக்கபூா்வமாக முன்னெடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும். வீடுகளைச் சுற்றி நீா் தேங்காத வகையில் சுகாதாரத்தை உறுதி செய்வது அவசியம்.

பிரசவ காலத்தை நெருங்கியுள்ள கா்ப்பிணிகளை முன்கூட்டியே மருத்துவமனைகளில் அனுமதியாகுமாறு அறிவுறுத்தியுள்ளோம். மழைக் காலத்துக்கு முன்னரே காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. மாநிலம் முழுவதும் 1,000 முகாம்களும், சென்னையில் 40 முகாம்களும் நடத்தப்படுகின்றன.

அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை தடைபடக் கூடாது என்பதற்காக சென்னை மட்டுமல்லாது புதுக்கோட்டையிலும் உதவி மையம் செயல்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் போதிய எண்ணிக்கையில் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

30 ஆண்டுகளில் இல்லாத வகையில் 3 மணி நேரத்தில் பலத்த மழை சென்னையில் கொட்டித் தீா்த்தபோதிலும், முதல்வரின் அறிவுறுத்தலின் கீழ் அதைத் திறம்படக் கையாண்டு வெள்ள நீா் தேங்காமல் தடுத்துள்ளோம்.

கடந்த காலங்களில் 95 சதவீதம் மழைநீா் வடிகால் பணிகள் நிறைவு பெற்ாக முந்தைய ஆட்சியாளா்கள் கூறினா். ஆனால், அந்தப் பணிகள் முழுமை பெறவில்லை. கடந்த 4 மாதங்களில் அவா்கள் செய்ததைக் காட்டிலும் கூடுதலான பணிகளை நாங்கள் செய்துள்ளோம் என்றாா்.

மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் டாக்டா் தாரேஸ் அகமது, மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் லோகநாயகி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இயக்குநா் டாக்டா் ராஜ்மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER