காங்கிரஸ்-தவெக இடையே எந்த சலசலப்பும் இல்லை: அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி
இரண்டு அமைச்சர்கள் கிடைத்துவிட்டார்கள் என்பதற்காக காங்கிரஸ் கட்சி திருப்தி அடைந்துவிடவில்லை என அமைச்சர் ராஜேஷ்குமார் கூறியிருப்பது...

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் - எக்ஸ்
காங்கிரஸ்-தவெக இடையே எந்த கருத்து மோதலும் சலசலப்பும் இல்லை என்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் கூறினார்.
நெல்லையில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
சுற்றுலாத்துறை மூலம் தாமிரவருணி நதியை ரூ.53 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்தி மேம்படுத்தும் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நதி சுற்றுலாவிற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கப்படும். திருப்புடைமருதூர் பகுதியில் ஆன்மிகச் சுற்றுலா மேற்கொள்வதற்கான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மணிமுத்தாறு சூழல் பூங்காவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த மூன்று இடங்களிலும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்துவது தொடர்பாக சுற்றுலாத்துறைக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன. அவற்றை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டந்தோறும் சுற்றுலாத் தலங்களை ஆய்வு செய்து மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மகாபலிபுரத்தை ரூ.200 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசு நிதியுதவியுடன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறுத்த வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல. மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதுதான் எங்களது பணி. சட்டம்-ஒழுங்கு சரியில்லை எனப் பொதுவாக ஒரு அரசின் மீது குற்றம்சாட்டுவது சரியான அணுகுமுறை அல்ல. சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதில் எந்தவித சமரசமும் கிடையாது என முதல்வர் அறிவித்துள்ளார். குற்றவாளி ஒருவர் கூட தப்பிக்கக் கூடாது, நிரபராதி ஒருவர் கூட தண்டிக்கப்படக் கூடாது என்பதே எங்களது நோக்கம்.
நீலகிரி பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழையால் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதச்சார்பற்ற சமூகநீதிக் கூட்டணியில் நாங்கள் இடம்பெற்றுள்ளோம். இடைத்தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும்.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்பதுதான் எங்களது கனவு. கட்சியை வளர்த்து வலுப்படுத்துவதே எங்களது நோக்கம். இரண்டு அமைச்சர்கள் கிடைத்துவிட்டார்கள் என்பதற்காக காங்கிரஸ் கட்சி திருப்தி அடைந்துவிடவில்லை. ஒவ்வொரு பத்து வாக்குச்சாவடிகளுக்கும் ஒரு தலைவர் என்ற அடிப்படையில் கட்சியை வலுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே எந்தவித சலசலப்பும் இல்லை. இந்த அரசு லஞ்சம், ஊழல் இல்லாத அரசாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
There is no tension between Congress and TVK: says Minister Rajesh Kumar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


