மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

மாற்றத்தை முன்னிறுத்திய தவெக! 3 மாதங்களாக மாற்றப்படாத அரசு இணையதளம்!

மாற்றத்தை முன்னிறுத்திய தவெக ஆட்சியில் 3 மாதங்களாக மாறாத அரசு இணையதளம் பற்றி..

தமிழக அரசின் இணையதளம்

தமிழக அரசின் இணையதளம் - tn.gov.in

Updated On :

மாற்றம்... மாற்றம்.. என்று ஒற்றை வார்த்தையை முன்னிறுத்தி, தமிழகத்தில் பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைமையிலான ஆட்சிக் காலம் தொடங்கி ஐந்து மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் முறையாக அப்டேட் செய்யப்பட்டு மூன்று மாதங்கள் ஆகிறது என்ற கசப்பான செய்தி வெளியாகியிருக்கிறது.

அதிகாரிகளுக்கான தகவல்கள், அரசின் உத்தரவுகள், நியமன உத்தரவுகள், அரசின் கொள்கை விளக்கங்கள் அனைத்தும் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படாமல் உள்ளது.

தமிழக அரசின் இணையதளத்தில் இந்த விவரங்கள் சரியாக, உரிய தேதியில் பதிவிடப்பட்டு வந்தால்தான் அரசு எடுக்கும் முடிவுகள், நடவடிக்கைகள் என அனைத்தையும் மக்களும் ஊடகங்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.

மேலும், தமிழக அரசின் முக்கிய நடவடிக்கைகளை எல்லாம் அறிந்துகொள்ள tn.gov.in என்ற இணையதளமே முக்கிய ஊடகமாக உள்ளது. இந்த இணைதயளம், மாநில அமைச்சரவை, அரசுத் துறைகள், பல்வேறு துறைகளின் தலைமையிடங்கள், மாவட்ட ஆட்சியர்களால் வழங்கப்படும் தகவல்களைக் கொண்டு தேசிய தகவல் மையம் மூலம் செயல்பட்டு வருகிறது.

இந்த இணையதளத்தில்தான், மாநில அரசின் நிதிநிலை அறிவிப்புகள், கொள்கை விளக்கக் குறிப்புகள், அமைச்சரவை முடிவுகள், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தலைமையில் நடைபெறும் கூட்டங்களில் எடுக்கப்படும் புதிய முடிவுகளை பதிவிட்டு, மக்கள் அறிந்துகொள்ள செய்ய முடியும்.

ஆனால், இந்த இணையதளத்தின் பல பக்கங்கள் மூன்று மாதங்களுக்கு மேல் புதிய தகவல்கள் எதுவும் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது. அது மட்டுமல்ல, பல துறைகளின் செயலர்கள் பணியிட மாற்றங்கள் செய்யப்பட்டுவிட்டனர். ஆனால், அதுபற்றிய விவரங்கள் இதில் மாற்றப்படாமல், முன்பு பொறுப்பில் இருந்தவர்கள் பெயர்களே இடம்பெற்றிருப்பதால் மக்களுக்கு ஏதேனும் விவரங்கள், புகார்கள் கொடுக்க வேண்டும் என்றால் அது அவ்வளவு எளிதாக நடக்காது.

இந்த படத்தில், வாட்ஸ் நியூ என்ற பகுதி, கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பழைய தகவல்களைக் கொண்டுள்ளது.

Story image

மாநில அரசின் வாரியங்கள், தீர்ப்பாயங்கள், ஆணையங்களில் நியமிக்கப்பட்ட நபர்களின் விவரங்களும் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது. இது ஏற்கனவே அரசுப் பதவிகளில், சில நெருங்கிய நண்பர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டு வருவது பேசுபொருளான நிலையில், அது பற்றிய அறிவிப்புகளையே மக்களின் கண்பார்வையிலிருந்து மறைத்துவிடும் இந்த நடைமுறை, தவெகவுக்கு வாக்களித்த இளம் தலைமுறையினருக்கு பெருத்த சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

வெளிப்படையாக, ஊழலற்ற ஆட்சியைக் கொண்டு வருவோம், மாற்றம் வரும் என்று வாக்குறுதி அளித்திருந்த முதல்வர் ஜோசப் விஜய்க்கு இது பற்றி தகவல்கள் சென்று சேரவில்லை என்றுதான் தவெகவினர் கருதுகிறார்கள்.

ஏற்கனவே, தமிழக அரசு பிறப்பித்த 5 அரசாணைகள் திரும்பப் பெறப்பட்டது, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் முடிவு போன்றவை தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றுத் தந்திருக்கும் நிலையில், இந்த இணையதள விவகாரம் நிச்சயம் விஸ்வரூபம் எடுக்கலாம்.

Story image

இந்த விவகாரத்தில் தமிழக அரசிடமிருந்து தகவல்கள் செல்லவில்லையா? அல்லது உரிய முறையில் பதிவேற்றம் செய்யப்படவில்லையா? எங்கே தவறு நேர்ந்திருக்கலாம் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. மாற்றம் மாற்றம் என வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றம் கிடைக்காமல், உடனடியாக இந்த இணையதளத்தில் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு, முதல் மாற்றத்தை இணையதளத்திலிருந்து கொண்டு வர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.

Summary

Regarding the government website that has remained unchanged for three months under the TVK administration—which campaigned on a platform of change...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.