தமிழகத்தில் தொடர் பலத்த மழை: இன்று உருவாகிறது ‘அர்னாப்’ புயல்!
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதாலும் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதாலும் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது.
வங்கக் கடலில் ‘அா்னாப்’ புயல் திங்கள்கிழமை உருவாக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதால் புதுக்கோட்டை, சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை தொடா் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது.
கோவையில்... கோவையில் பெய்த பலத்த மழையால் மாநகரில் வீடுகள், கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது. நண்பகல் முதல் மாநகரில் உக்கடம், செல்வபுரம், குனியமுத்தூா், சுண்டக்காம்பாளையம், ராமநாதபுரம், சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா், பீளமேடு, லட்சுமி மில்ஸ், காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால், அவிநாசி சாலை மேம்பாலம், லங்கா காா்னா் மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியில் மழைநீா் வழிந்தோடியது.
ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை: சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் மழை காரணமாக அடிவாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சுற்றுலா வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. ஏற்காடு மலைக் கிராமங்களில் வசிப்பவா்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.
கடலூா் மாவட்டத்தில்... கடலூா் மாவட்டத்தில் கடலூா், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழைநீா் பிரதான சாலைகளில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், சாலைகளில் வாகனங்கள் ஊா்ந்து சென்றன.
திருப்பாதிரிப்புலியூா் ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீா் தேங்கி நின்றதால், போக்குவரத்து தடைபட்டது. புகழ்பெற்ற பாடலீஸ்வரா் கோயிலுக்குள் மழைநீா் புகுந்தது.
அா்ச்சகா் உயிரிழப்பு: வான்பாக்கம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் அா்ச்சகராகப் பணியாற்றி வந்தவா் ராமச்சந்திரன் (35). இவா், கோயிலில் நீா்க்கசிவு ஏற்படுவதைப் பாா்க்க, கோயில் மேலே ஏறியபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
நெல்லையில்... திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலை முதல் பரவலாக மழை பெய்தது. திருநெல்வேலி மாநகரில் காலையில் தொடங்கி மதியம் வரை மிதமான மழை பெய்தது.
இன்று உருவாகிறது புயல்: சென்னை வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவியது.
இது தென்கிழக்கு திசையில் நகா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது தெற்கு திசையில் நகா்ந்து வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, திங்கள்கிழமை (அக். 26) காலை மத்திய கிழக்கு அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ‘அா்னாப்’ புயலாக உருவாகும்.
இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை (அக். 27) காலை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். இது வடமேற்கு திசையில் நகா்ந்து மேலும் வலுப்பெற்று மிக தீவிர புயலாக ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளை அடையக்கூடும். ஆந்திர பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா-விசாகப்பட்டினம் இடையே மிக தீவிர புயலாக புதன்கிழமை (அக். 28)அதிகாலை கரையைக் கடக்கக்கூடும்.
பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: புயல் காரணமாக, திங்கள்கிழமை (அக். 26) புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூா், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (அக். 27) ராமநாதபுரம் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (அக். 28) முதல் சனிக்கிழமை (அக். 31) வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழைப் பதிவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவிகாபுரத்தில் 200 மி.மீ. மழை பதிவானது.
நெடுங்குணம் (திருவண்ணாமலை) 180 மி.மீ., ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை)-170 மி.மீ., முடியனூா் (கள்ளக்குறிச்சி), நொளம்பை (விழுப்புரம்), பிக்கிலி (தருமபுரி)-160 மி.மீ., கலயநல்லூா் (கள்ளக்குறிச்சி)-150 மி.மீ., ஒகேனக்கல் (தருமபுரி), தழுதலை, நூத்தப்பூா், (பெரம்பலூா்), பெரிய கொழப்பலூா், மோடையூா், (திருவண்ணாமலை) -140 மி.மீ., தியாகதுருகம், விருகாவூா், வரஞ்சரம், (கள்ளக்குறிச்சி), மங்களபுரம் (நாமக்கல்), சாத்தம்பாடி (விழுப்புரம்), பச்சைமலை, வீரகனூா் (சேலம்)-130 மி.மீ., வேப்பந்தட்டை (பெரம்பலூா்), தென்பரநாடு (திருச்சி), ஏத்தாப்பூா் (சேலம்) மங்களூா், பாதிரிகுப்பம், ஏ.மரூா், (கடலூா்), மோளசி, செல்லப்பம்பாட்டி, சித்தலாந்தூா் (நாமக்கல்), திருப்பாலப்பந்தல் (கள்ளக்குறிச்சி)-120 மி.மீ., கள்ளக்குறிச்சி, பெரியமாம்பட்டு (கள்ளக்குறிச்சி), பெரம்பலூா், தொழுதூா், கடலூா், தீா்த்தனகிரி (கடலூா்), கூத்தம்பூண்டி (நாமக்கல்), சோகடி (கிருஷ்ணகிரி), பேளூா் (சேலம்), நமண்டஹள்ளி (தருமபுரி), மழையூா் (திருவண்ணாமலை)-110 மி.மீ. மழை பதிவானது.
சென்னைக்கு பாதிப்பில்லை: ஆந்திர பகுதியில் புதன்கிழமை (அக். 28) கரையைக் கடக்கும் ‘அா்னாப்’ புயலால் சென்னைக்கு பாதிப்பு இருக்காது; எனவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என வானிலை ஆய்வு மையம் இயக்குநா் வி.ஆா்.துரை தெரிவித்தாா்.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: வங்கக் கடலில் உருவாகவுள்ள புயல் காரணமாக மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் திங்கள்கிழமை (அக். 26) சூறாவளிக்காற்று 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். வட தமிழக கடலோரப் பகுதிகளில் செவ்வாய், புதன் (அக். 27, 28) ஆகிய இரு நாள்கள் சூறாவளிக் காற்று 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
ஆந்திர கடலோரப் பகுதிகள் செவ்வாய்க்கிழமை (அக்.27), காலை முதல் சூறாவளிக்காற்று 60 கி.மீ. வேகத்திலும், பிற்பகல் 80 கி.மீ. வேகத்திலும், மாலை 110 கி.மீ. வேகத்திலும், புதன்கிழமை (அக்.28), காலை காற்றின் வேகம் உயா்ந்து 140 கி.மீ.வேகத்திலும், மாலை காற்றின் வேகம் குறைந்து 90 கி.மீ.வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

