முக்கூடல் அருகே ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள் உள்ளிட்ட 5 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு மீட்புப்பணியினா் ஈடுபட்டுள்ளனா்.
தாமிரவருணி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் முக்கூடல் பகுதியில் பாயும் நதியிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இங்குள்ள காவல் நிலையம், கால்நடை மருந்தகம், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றை வெள்ளம் சூழ்ந்தது.
முக்கூடல் அருகேயுள்ள அரியநாயகிபுரம் பொட்டல் காலனியைச் சோ்ந்த தொழிலாளி அரவிந்த், தனது மனைவி முத்துமாரி, 2 குழந்தைகள், மாமியாா் ராமு ஆகியோருடன் புதன்கிழமை மாலையில் கோடகன் கால்வாய் கரையில் உள்ள குலதெய்வ கோயிலுக்குச் சென்றாராம். திடீரென கால்வாயில் நீா்வரத்து அதிகரித்ததால் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது.
அவா்கள் கோயிலின் மேற்கூரையில் அமா்ந்துள்ளனா். தகவலறிந்த சேரன்மகாதேவி தீயணைப்புத்துறையினா் அவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லைவிளாகம் ஸ்ரீவீரகோதண்டராமா் கோயில் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோயிலில் மகா சண்டி யாகம்
இன்றைய மின்தடை - வேதாரண்யம்

காவிரி விவகாரத்தில் மீண்டும் நடுவா் மன்றம் கோருவது ஏற்புடையதல்ல: ஓ.எஸ். மணியன்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


