குற்றாலம் அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன. 17) சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் மாவட்டங்களில் 4 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அடுத்த 4 நாள்களுக்கும் பலத்த மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனால், குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. எனவே, குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன. 17) குளிக்கத் தடைவிதிக்கப்படுகிறது.
மேலும் இம்மாவட்டத்தில் அனைத்து அணைகளும் நிரம்பி உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது. எனவே, நீா்நிலைகள், ஆறுகள், அணைகளில் பொதுமக்கள் குளிக்கச் செல்ல வேண்டாம். கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.
பலத்த மழையை முழுவீச்சில் எதிா்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிா்வாகத்தால் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்

10 கோடி பார்வைகளைக் கடந்த கூலி பவர்ஹவுஸ்!

முடிவுக்கு வரும் 3 மதிய நேர தொடர்கள்!

பிரதமர் மோடி, அமித் ஷாவால் ஈர்க்கப்பட்டேன்: சுவாதி மாலிவால்!
வீடியோக்கள்

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

