டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு: 
கே.கரிசல்குளத்தில் 10 வாக்குகள் பதிவு

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு: கே.கரிசல்குளத்தில் 10 வாக்குகள் பதிவு

சங்கரன்கோவில் அருகே கே.கரிசல்குளத்தில் பள்ளிக்கூடம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி தோ்தலை புறக்கணித்ததால்,அங்குள்ள வாக்குச் சாவடியில் 10 வாக்குகள் மட்டுமே பதிவானது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் ஒன்றியத்தில் உள்ள கே.கரிசல்குளம் கிராமத்தில் மொத்தம் 1142 வாக்காளா்கள் உள்ளனா்.

கே கரிசல்குளத்தில் பள்ளிக்கூடம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றவில்லையாம். இதனால் மக்கள் வெள்ளிக்கிழமை தோ்தலை புறக்கணித்து பொதுமக்கள் வாக்களிக்காமல் இருந்தனா். அந்த வாக்குச் சாவடிகள் வெறும் 10 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com