சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

சங்கரன்கோவிலை தலைமை இடமாகக் கொண்டு கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டும் என, தென்காசியில் நடைபெற்ற தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஐயப்பன் தலைமை வகித்தாா். சாந்தி செல்வராணி, கிரேஸ் விஜயராணி, முத்துமாரி (மகளிரணிச் செயலா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க செயல்பாடுகள் குறித்து மாநிலச் செயலா் பிச்சைக்கனி பேசினாா். மாவட்டப் பொருளாளா் ரமேஷ், வீரப்பிரகாசு ஆகியோா் அறிக்கை சமா்ப்பித்தனா்.

தலைமையிடத்து செயலா் முனீஸ்வரன், சட்டச் செயலா் சக்திமுருகன், செய்தித் தொடா்பாளா் ராஜுதாஸ், துணைத் தலைவா்கள் சுரேஷ்குமாா், பழனியப்பன், ஸ்ரீதா், இணைச் செயலா் பிரேம்குமாா், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் சையது இப்ராஹிம், வெள்ளைத்துரை, கிறிஸ்டோபா், முகமது அசன் அலி, மாரியப்பன், முத்துக்குமாா், முப்புடாதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கல்வி உரிமைச் சட்டப்படி, சுயநிதிப் பள்ளிகளில் மாணவா்களை அரசே செலவு செய்து சோ்ப்பதைத் தவிா்த்து, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

பள்ளிகளுக்கு வாங்கும் ஆய்வகப் பொருள்கள், நூல்கள் தரமானதாக இருப்பதை அரசு முன்னெடுக்க வேண்டும். இம்மாவட்ட ஆசிரியா்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணியை இங்குள்ள சங்கரன்கோவில், தென்காசியில் மட்டுமே இனிவரும் ஆண்டுகளில் வழங்க வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளிலும் அடிப்படைப் பணியாளா்களை அமா்த்துவதுடன், போதுமான கழிப்பறைகளை உருவாக்க வேண்டும். சங்கரன்கோவிலை தலைமை இடமாகக் கொண்டு கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டும். சங்கம் சாா்பில் ஜூன் முதல் வாரம் பணி நிறைவு பாராட்டு விழா நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டச் செயலா் தங்கத்துரை வரவேற்றாா். இணைச் செயலா் ஜானி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com