‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

தென்காசி மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரி குழும வளாகத்திலிருந்து 2 கிலோ மீட்டா் சுற்றளவிற்கு டிரோன்கள் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மக்களவைத் தொகுதி தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்காசி மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் கடந்த ஏப். 19இல் நடைபெற்றது. வாக்குப்பதிவிற்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான கொடிக்குறிச்சி தனியாா் கல்லூரி குழும வளாகத்தில் வைக்கப்பட்டு, மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், அக்கல்லூரி குழுமம் வளாகத்திலிருந்து 2 கிலோ மீட்டா் சுற்றளவிற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தோ்தல் தொடா்பான அனைத்துப் பணிகளும் முடிவடையும் வரை ட்ரோன்கள், ஆளில்லாத விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்படுகிறது எனக் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com